| 245 |
: |
_ _ |a அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோயில் - |
| 246 |
: |
_ _ |a வெள்ளிக்கீழ் மேய நாயனார் கோயில் |
| 520 |
: |
_ _ |a சென்னை தாம்பரத்திலிருந்து குன்றத்தூர் வழியாக மாங்காடு செல்லலாம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து குமணன் சாவடி வழியாக மாங்காடு சென்றடையலாம். மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலின் உபகோயிலாக இக்கோயில் விளங்குகிறது. இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் சோழர்கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. விமானம் தளப்பகுதி தற்போது சுதையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் இலிங்கவடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். மாங்காடு வெள்ளீசுவரர் கோயில் தாங்குதளம் முதல் கூரை வரை கற்றளியாகவும், தளப்பகுதி தற்போது புனரமைக்கப்பட்ட சுதையாலும் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் பல்லவர் காலத்திலேயே கற்றளியாய் இருந்திருக்க வேண்டும். இங்கு மூன்றாம் நந்திவர்மனின் 17-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு இங்குள்ள இறைவனை திருவெள்ளிக்கீழ் மேய நாயனார் என்கிறது. மேலும் அபராஜிதவர்மப் பல்லவனின் கிரந்தக் கல்வெட்டுகளும் உள்ளன. அதன் தொடர்ச்சியாக சோழர் காலத்தில் இக்கோயில் தற்போது உள்ள நிலையில் சிற்பங்களும், கோயில் அமைப்புமாக புனரமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில் சிற்பங்களை நோக்குகையில் பல்லவர்-சோழர் கால கலை பிரதிபலிப்பைக் காட்டுகின்றது. மேலும் விஜயநகர ஆட்சியின் போது இரண்டாம் தேவராயனும், பிரதாப தேவராயனும் இக்கோயிலுக்கு நொந்தா விளக்கெரிக்க கொடையளித்துள்ளனர். எனவே பல்லவர், சோழர், விஜயநகரர் ஆகிய மன்னர்களின் தொடர்ச்சியான கலைப்பாணியைப் பெற்று இக்கோயில் விளங்குகிறது. முகமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள தூண்களில் விஜயநகர காலத்து புடைப்புச் சிற்பங்கள் குறிப்பாக அமர்ந்த நிலையில் உள்ள சிங்கம் காட்டப்பட்டுள்ளது. |
| 653 |
: |
_ _ |a மாங்காடு கோயில்கள், வெள்ளீசுவரமுடையார், வெள்ளீசுவரர், திரு வெள்ளிக்கீழ் மேய நாயனார், மூன்றாம் நந்தி வர்மன், அபராஜிதவர்மன், மூன்றாம் இராஜராஜன், இரண்டாம் தேவராயன், பிரதாப் தேவராயன், மாங்காடு சிவன் கோயில் |
| 700 |
: |
_ _ |a மதுரை கோ.சசிகலா |
| 710 |
: |
_ _ |a மதுரை கோ.சசிகலா |
| 905 |
: |
_ _ |a கி.பி.9-12-ஆம் நூற்றாண்டு / மூன்றாம் நந்தி வர்மன், அபராஜித வர்மன், மூன்றாம் இராஜராஜ சோழன் |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 800 ஆண்டு பழமையானது. பிற்கால சொழர் கால கலை, கட்டடக்கலையைப் பிரதிபலிக்கின்றது. |
| 914 |
: |
_ _ |a 13.0290155 |
| 915 |
: |
_ _ |a 80.10656342 |
| 916 |
: |
_ _ |a அருள்மிகு வெள்ளீசுவரர் |
| 927 |
: |
_ _ |a இங்கு மூன்றாம் நந்திவர்மனின் 17-ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு இங்குள்ள இறைவனை திருவெள்ளிக்கீழ் மேய நாயனார் என்கிறது. மேலும் விஜயநகர ஆட்சியின் போது இரண்டாம் தேவராயனும், பிரதாப தேவராயனும் இக்கோயிலுக்கு நொந்தா விளக்கெரிக்க கொடையளித்துள்ளனர். |
| 928 |
: |
_ _ |a இல்லை |
| 929 |
: |
_ _ |a கருவறை தேவகோட்டங்களிலும், அர்த்தமண்டபக் கோட்டங்களிலும் முறையே தெற்கில் தட்சிணாமூர்த்தி, மேற்கில் அண்ணாமலையார் (இலிங்கோத்பவர்), வடக்கில் பிரம்மன் அமைக்கப் பட்டுள்ளனர். அர்த்தமண்டப கோட்டத்தில் தெற்கில் விநாயகரும், வடக்கில் துர்க்கையும் அமைக்கப்பட்டுள்ளனர். பரிவார சந்நிதிகளாக தென்மேற்கில் கன்னிமூலை கணபதியும், வடகிழக்கில் சுப்ரமண்யரும் அருள்பாலிக்கின்றனர். இவ்விரு சந்நிதிகளுக்கும் நடுவே மேற்கே வீரபத்திரர் சிற்பம் அமைந்துள்ளது. |
| 932 |
: |
_ _ |a இக்கோயில் முழுவதும் புனரமைக்கப்பட்டுள்ளது. கருவறை தேவகோட்டங்களில் சோழர்கால சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. கருவறை சதுர வடிவில் அமைந்துள்ளது. விமானம் தளப்பகுதி தற்போது சுதையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருவறை திருமுன்னில் சோழர்கால வாயிற்காவலர்கள் காட்டப்பட்டுள்ளனர். கருவறையில் இலிங்கவடிவில் இறைவன் காட்சியளிக்கிறார். |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| 934 |
: |
_ _ |a மாங்காடு காமாட்சியம்மன் கோயில், மாங்காடு பெருமாள் கோயில் |
| 935 |
: |
_ _ |a சென்னை தாம்பரத்திலிருந்து குன்றத்தூர் வழியாக மாங்காடு செல்லலாம். சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து குமணன் சாவடி வழியாக மாங்காடு செல்லலாம். |
| 936 |
: |
_ _ |a காலை 6.00-12.30 மாலை 4.00-8.30 |
| 937 |
: |
_ _ |a குமணன் சாவடி, மாங்காடு |
| 938 |
: |
_ _ |a பல்லாவரம் |
| 939 |
: |
_ _ |a சென்னை - மீனம்பாக்கம் |
| 940 |
: |
_ _ |a சென்னை மாநகர விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000010 |
| barcode |
: |
TVA_TEM_000010 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_விமானம்-0001.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_விமானம்-0001.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_தாங்குதளம்-0002.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_விமானம்-0003.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_விமானம்-0004.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_தாங்குதளம்-சுவர்-0005.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_அரைத்தூண்-0006.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_கணபதி-0007.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_தட்சிணாமூர்த்தி-0008.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_இலிங்கோத்பவர்-0009.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_விஷ்ணு-0010.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_பிரம்மன்-0011.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_பிரம்மன்-0012.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_விஷ்ணு-துர்க்கை-0013.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_வீரபத்திரர்-0014.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_நந்தி-0015.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_கணபதி-0016.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_தவ்வை-0017.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_சாமுண்டி-0018.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_தூண்-புடைப்புச்சிற்பம்-0019.jpg
TVA_TEM_000010/TVA_TEM_000010_வெள்ளீசுவரர்-கோயில்_சிம்மத்தூண்-சிற்பம்-0020.jpg
|